சுகாதார அமைச்சகம் 214 நோட்டீஸ்களை வெளியிட்டன

சைபர்ஜெயா, மார்ச் 7 –

புகையிலை தயாரிப்பு கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை அமலாக்க நடவடிக்கையின் மூலம் கடந்த இரண்டு நாட்கள் மேற்கொண்ட ஓப்ஸ் தெம்பாட் மக்கான் திடீர் சோதனையில் சுகாதார அமைச்சகம் 54,050 வெள்ளி மதிப்பிலான 214 நோட்டீஸ்களை வெளியிட்டுள்ளது.

வெளியிடப்பட்ட மொத்த நோட்டீஸ்களில் 110 நோட்டீஸ்கள் உணவகங்களிலும், 48 நோட்டீஸ்கள் வணிக வளாகங்களிலும், மேலும் 20 நோட்டீஸ்கள் விமான நிலையங்களில் புகைப்பிடித்த குற்றங்களுக்காக வழங்கப்பட்டதாக சுகாதார துணை இயக்குநர்டத்துக் டாக்டர் னொர்ஹாயாத்தி ருஸ்லி தெரிவித்தார்.

புகைப்பிடிக்கக்கூடாது என்ற பதாகையை காட்சிப்படுத்த தவறிய வளாக உரிமையாளர்களுக்கு 29 நோட்டீஸ்களும் குறிப்பிடப்பட்ட வளாகங்களில் புகைப்பிடிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த தவறியதற்காக 5 நோட்டீஸ்களும் வழங்கப்பட்டதாக டாக்டர் னொர்ஹாயாத்தி ருஸ்லி கூறினார்.

சிறுவர்கள் புகைப்பிடித்த குற்றத்திற்காகவும் சிறார்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்யும் எச்சரிக்கையை வலியுறுத்த தவறியதற்காகவும் மேலும் 2 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டதாக டாக்டர் னொர்ஹாயாத்தி ருஸ்லி மேலும் விவரித்தார்.

இதுவரையில், இவ்வாண்டு மேற்கொண்ட இச்சோதனையில் சிலாங்கூர், ஜொகூர், பினாங்கு, சரவாக் உட்பட பகாங் மாநிலங்களில் அதிகளவில் நோட்டீஸ்கள் வெளியாக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்