குடிநுழைவுத்துறை 12 வயது சிறுவனை பணியிலிருந்து காப்பாற்றியது

கோலாலம்பூர், மார்ச் 7 –

கோலாலம்பூர், பசார் போரொங் கில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஒப்ஸ் கூதிப் திடீர் சோதனையில் 12 வயதுடைய தொழிலாளியான சிறுவன் ஒருவன் குடிநுழைவுத்துறை அதிகாரிகளினால் காப்பாற்றப்பட்டான்.

மலாய் மொழியில் பேச முடியாத அச்சிறுவன் காய்கறி, மீன் ஆகிய பொருட்களை லாரியில் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட இந்திய சிறுவனுக்கு தமிழ்மொழி பேச தெரிந்ததால் இரண்டு மாதங்களுக்கு முன் மலேசியாவிற்கு அச்சிறுவன் தரைவழியாக நுழைந்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த மலேசியாவிற்கு வந்ததாகவும் மியன்மாரில் உள்ள தனது குடும்பத்தை விட்டு பிழைப்பிற்காக தொலைத்தூரத்தில் வந்து வேலை செய்வதாகவும் விசாரணையில் அறியப்பட்டது.

இச்சோதனையில் கைது செய்யப்பட்ட 38 சட்டவிரோத குடியேறிகளில் இச்சிறுவனும் உள்ளடங்குவார் என்று கோலாலம்பூர், மலேசிய குடிநுழைவுத்துறை இயக்குநர் வாண் மொகமாட் சவுபீ வான் யூசுப் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்