சுமூகமான தைப்பூசத்தை நோக்கி சிறப்புப் பணிக்குழு

நாடளாவிய நிலையில், இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாக மட்டும் இல்லாமல் சுமூகமாகவும் நடைபெற அரசு சாரா இந்து இயக்கங்கள், ஆலயங்கள் ஒருங்கிணைப்பு மன்றம் இவ்வாண்டு களம் இறங்கியுள்ளது என டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

இன்று, மலேசிய இந்து சங்கத் தலைமையகத்தில், நடந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய அவர் குறிப்பிடுகயில், 10வது ஆண்டாக இந்த பணிக்குழு சிறப்பாக பணியாற்றி வருவதோடு மக்களின் ஆதரவும் தொண்டூழியர்களின் ஊக்குவிப்பும் உந்து சக்தியாக அமைகிறது என டாக்டர் குணராஜ் குறிப்பிட்டார்.

அரசு சாரா இந்து இயக்கங்கள், ஆலயங்கள் ஒருங்கிணைப்பு மன்றத்தில் அங்கத்துவம் பெற்ற மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் “தர்ம வேல்” கூடாரம், சுங்கை பெட்டானி, ஈப்போ, கோல சிலாங்கூர், சுங்கை சிப்புட், பத்து மலை போன்ற நாட்டின் முக்கியமான திருமுருகன் கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கும் எனவும், அதில் பால் குடம் ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தும் பர்தர்களுக்கு இலவசமாக சிறப்புப் பூஜை செய்து கொடுக்கப்படும் என மாமன்றத்தைச் சேர்ந்த ரிஷிகுமார் குறிப்பிட்டார்.

சிலனேமாற்றுப் பேர்வழிகளிடம் அதிகப் பணம் கொடுத்து எமாறாமல், மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் “தர்ம வேல்” கூடாரத்தில் இந்த இலவச சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.

கிளீன் தைப்பூசம் குழுவினரின் ஒருங்கிணைப்பில், தைப்பூசத்தின்போது கோயில்களில் சேரும் குப்பைகளை அகற்ற கூடுதலான எண்ணிக்கையில், பெரிய அளவிலான குப்பைத் தொட்டிகளைப் பெற்றுத் தர இருப்பதாக அக்குழுவைச் சேர்ந்த சத்தியா தெரிவித்தார். கடந்த ஆண்டு 300 குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு 400 ஆக அதிகரிக்கப்பட இருப்பதாக அவர் சொன்னார்.

பக்தர்கள் கூடும்போது குப்பையும் கூடும். அதனைக் குறைக்கும் வகையில் இந்தப் பணிக்குழு செயல்படும். எனவே, தங்களோடு இணைந்து சேவையாற்ற இளைஞர்கள் அதிகம் தேவைப்படுகின்ற நிலையில், அதற்கானப் பதிவும் ஒருங்கிணைந்த முறையில் நடைபெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.

தைப்பூசத் திருவிழா கொண்டாட்டம் குறித்த கையேட்டினை மலேசிய இந்து சங்கம் வெளியிட்டுள்ள நிலையில், சமய நெறி மாறாமல் அந்தக் கையேட்டில் கூறிய வழிகாட்டுதலின் அடிப்படையில் கொண்டாடப்பட வேண்டும் அரசு சாரா இந்து இயக்கங்கள், ஆலயங்கள் ஒருங்கிணைப்பு மன்றம் தெரிவித்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்