இந்தோ. ஆடவரின் விண்ணப்பம் நிராகரிப்பு

கடந்த 2002 ஆம் ஆண்டு தனது மூன்று பெண் பிள்ளைகளை கொலை செய்த குற்றத்திற்காக தனக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கு நபர் ஒருவர் செய்து கொண்ட விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

ஒரு இந்தோனேசியரான 67 வயது ஜுனைடி பம்பாங் என்ற அந்த நபரின் விண்ணப்பத்தை நிராகரிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டான் ஶ்ரீ இஸ்கண்டார் அபாங் ஹாஷிம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்நபருக்கு எதிரான மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கு காரணமே இல்லை என்றும் இதனை தங்களின் விவேகத்திற்கு உட்பட்டதாக பரிசீலிக்க இயலாது என்றும் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர் கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆட்ம தேதி இரவு 8 மணியளவில் பெக்கான் பகாங், கம்போங் டுசுன் சினி என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்