செந்தூலில் குடும்ப மாது கடத்தல் ஒரு பெண் உட்பட ஐவர் கைது

கோலாலம்பூர், ஜாலான் செந்துலில் ஒரு லட்சம் வெள்ளி பிணைப்பணம் கோரி, ஒரு கடையிலிருந்து 30 வயது குடும்ப மாது ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் அந்த மாது பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன் இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் ஒரு பெண் உட்பட ஐவரை கைது செய்துள்ளனர். .

கடந்த திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் பல்பொருள் விற்பனை கடை ஒன்றில் பணியாளராக வேலை செய்து வந்த மாது ஒருவர், கடையிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வரப்பட்டு Myvi ரக கார் மூலம் கடத்திச் செல்லப்பட்டார்.

இந்த கடத்தலில் ஒரு பெண் உட்பட நான்கு நபர்கள் சம்பந்தப்பட்டு இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்ததாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் சுக்கார்நோ முஹமாட் சஹாரி தெரிவித்தார்.

அதேவேளையில் தம்மிடம் ஒரு லட்சம் வெள்ளி பிணைப்பணம் கோரி, தனது மனைவி கடத்தப்பட்டதாக 30 வயது மெக்கானிக் ஒருவரிடமிருந்து போலீசார் புகார் பெற்றனர்.

செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த அதிரடி போலீஸ் குழுவினர், மேற்கொண்ட துரித நடவடிக்கையில் மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் புக்கிட் டாமன்சாரா மற்றும் செந்தூல் ஆகிய இரு இடங்களில் மேற்கொண்ட சோதனையில் 25 க்கும் 31 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு ஆடவர்களையும், ஒரு பெண்ணையும் கைது செய்ததாக ACP_ Ahmad Sukarno தெரிவித்தார்.

அதேவேளையில் எந்தவொரு இடத்திலிலும் மறைத்து வைக்கப்படாமல் சுமார் பத்து மணி நேரம் கோலாலம்பூரில் காரிலேயே சுற்றி வரப்பட்ட பிணைப்பிடிக்கப்பட்ட மாதுவையும் எவ்வித காயமின்றி போலீசார் பாதுகாப்பாக மீட்டதாக ACP_ Ahmad Sukarno குறிப்பிட்டார்.

தம்மிடம் கோரிய ஒரு லட்சம் வெள்ளி பணத்தில் அந்த மாதுவின் கணவரான ஒரு மெக்கானிக் 45 ஆயிரம் வெள்ளியை அந்த கும்பலிடம் செலுத்தியதும் தெரியவந்துள்ளது.

போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் கொடுக்க வாங்கலில் ஏற்பட்ட ஒரு லட்சம் வெள்ளி கடனை அந்த மெக்கானிடமிருந்து திரும்ப கோருவதற்கு அவரின் நண்பரே அந்த மெக்கானிக்கின் மனைவியை கடத்தியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ACP_ Ahmad Sukarno தெரிவித்துள்ளார்.

இந்த கடத்தல் தொடர்பில் கெடா சுங்கைப்பட்டாணியைச் சேர்ந்த 26 வயது Mohd Danial Harris Azmi என்ற மேலும் ஒரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக ACP_ Ahmad Sukarno குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்