பெண்ணை தாக்கிய நாய் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

மெடான் திரெங்கானு – வில் கடந்த வியாழக்கிழமை ஒரு பெண்ணை தாக்கியதுடன் கடித்த மூன்று நாய்கள் சமீபத்தில் பிடிக்கப்பட்டத்தை தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பினாங்கு கால்நடை சேவைகள் துறை உட்பட பினாங்கு நகராண்மை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இந்த விலங்குகள் பிடிப்பட்டதாக கூறப்படுகின்றது.

ரேபிஸ் என்ற நோயின் அறிக்குறிகள் ஏதெனும் உள்ளதா அல்லது இல்லையா என்பதை கண்டறிவதற்கு அந்நாய்கள் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படும் என்று மாநில ஜே.பி.வி இயக்குநர் டாக்டர் சாய்ரா பானு முகமது ரெஜாப் தெரிவித்தார்.

இதில் அந்த விலங்குகள் நோய்வாய்ப்பட்டிருந்தால் ஆய்வுக்கு எடுக்கப்படும் என்றும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தால் உரிமையாளரிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுவிடும் என்று டாக்டர் சாய்ரா பானு விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்