ஜம்ரி வினோத்- திடம் பகிரங்க மன்னிப்பு கேற்பதா? அது நடக்காது, நீதிமன்றத்தில் சந்திக்க தயார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 09-

அண்மையில் நாடாளுமன்றத்தில் தாம் பேசியது குறித்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சூளுரைத்துள்ள சமயப் போதகர் ஜம்ரி வினோத் காளிமுத்து -விடம் தாம் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று ஜெலுதோங் எம்.பி ஆர்.எஸ்.என் ராயர் சவால் விடுத்துள்ளார்.

இந்துக்களையும், இந்து தெய்வங்களையும் இழிவுப்படுத்தி பேசிவரும் ஜம்ரி வினோத் காளிமுத்து -திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தாம் ஆற்றிய உரையில் உறுதியாக நிற்பதாகவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ராயர் குறிப்பிட்டுள்ளார்.

14 நாட்களுக்குள் ஜம்ரி வினோத்-திடம் எதற்காக தாம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வினவிய ராயர், தாம் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களை மீட்டுக்கொள்ள போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஜம்ரி வினோத்-யை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதால் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமோ அவசரமோ தமக்கு இல்லை என்பதையும் ராயர் தெளிவுப்படுத்தினார்.

இந்துக்களின் முதன்மை தெய்வமான சிவப்பெருமானை இழிவுப்படுத்தி பேசியிருப்பதாக கூறப்படும் ஜம்ரி வினோத் மீது உள்துறை அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராயர் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திருந்தார்.

இது தொடர்பாக நேற்று தமது வழக்கறிஞர் ஹானிப் காற்றி அப்துல்லாஹ் -வுடன் செய்தியாளர்களிடம் பேசிய ஜம்ரி வினோத், ஜெலுதோங் எம்.பி ராயர் தம்முடைய செயலுக்காக அடுத்த 14 நாட்களுக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்ததுடன் அவ்வாறு மன்னிப்பு கேட்க தவறுவாரேயானால் சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்