கண்ட இடங்களில் விருப்பம் போல் குப்பையைப் போடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

சிரம்பான், ஏப்ரல் 11-

நெகிரி செம்பிலானில் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டுவது மட்டுமின்றி, வாகனத்திலிருந்து வெளியில் குப்பைகளை வீசுவது அல்லது பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் விருப்பம்போல் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது ஊராட்சி மன்றம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும்.

அம்மாநிலத்தில் பொதுமக்கள் கூடுகின்ற பல்வேறு இடங்களில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது தூய்மை கழகம் SWCorp தலைமையில் CCTV கேமராக்கள் பொறுத்தப்பட்டிருப்பது அந்நடவடிக்கையை வழிவகுப்பதாக நெகிரி செம்பிலான் ஊராட்சி மன்றம், வீடமைப்பு, போக்குவரத்து ஆகிவற்றுக்கான செயற்குழு தலைவர் ஜே அருள் குமார் அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

வாகனத்திலிருந்தவாறு பொது இடங்களில் குப்பைகளை வீசுவோரை அடையாளம் கண்டு பிடிப்பதற்காக CCTV கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அது தவிர, குறுகிய காலத்தில் உயர் ஆற்றல் கொண்ட 40 CCTV கேமராக்களை வாங்கும் முயற்சியை SWCorp முன்னெடுத்துள்ளது.

பொது இடங்களில் குப்பைகளை வீசும் தரப்பினர் 10 ஆயிரம் வெள்ளி முதல் 100 ஆயிரம் வெற்றி வரையில் அபராதம் அல்லது 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரையில் சிறை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜே அருள் குமார் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்