ஜோகூர் மாநில புதிய போ​லீஸ் தலைவராக துணை கமிஷனர் எம். குமார் நியமனம்

அரச மலேசிய போ​லீஸ் படை, தனது 42 உயர் அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்களை அறிவித்துள்ளது. இதில் ஜோகூர் மாநிலத்தின் புதிய போ​லீஸ் தலைவராக கமிஷனர் அந்தஸ்தில் எம்.குமார் முத்துவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோகூர் மாநில போ​லீஸ் படையின் துணைத் தலைவராக பொறுப்பில் இருக்கும் துணை கமிஷனர் குமாரின் பதவி காலம், வரும் ஜனவரி 23 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

கடந்த 39 ஆண்டுகளில் ஒரு மாநிலத்தின் போ​லீஸ் தலைவராக ஓர் இந்தியர் நியமிக்கப்படுவது இது நான்காவது முறையாகும். 1977 அம் ஆம் சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவராக டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ பி. அழகேந்திரா , 2017 ஆம் ஆண்டு பினாங்கு மாநில போ​லீஸ் தலைவராக டத்தோஸ்ரீ தைவீகன் ஆறுமுகன், 2019 ஆம் ஆண்டு பினாங்கு மாநில போ​லீஸ் தலைவராக டத்தோ தி. நரேனா சேகரன் தங்கவேலு ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ​ஜோகூர் மாநில போ​லீஸ் படைக்கு மேலும் ஓர் இந்தியர் பொறுப்பேற்கவிருக்கிறார்.

மாநில போ​லீஸ் துறைக்கு தலைமையேற்ற இந்தியர்களில் டான்ஸ்ரீ அழகேந்திரா பொன்னுதுரை மட்டுமே 7 ஆண்டுகள் ஒரு மாநிலத்திற்கு தலைமையேற்று இருந்தார். கடந்த 1977 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவராக நியமிக்கப்பட்ட டான்ஸ்ரீ அழகேந்திரா. 1984 ஆண்டில் பணி ஓய்வுப்பெறும் வரையில் அப்பொறுப்பில் வீற்றிருந்தார்.

டத்தோஸ்ரீ தெய்வீகன் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி பினாங்கு மாநில போ​லீஸ் படைத் தலைவராக பொறுப்பேற்று 2019 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பணி ஓய்வுப்பெற்றார்.

போ​​லீஸ் படையில் மாநில அளவில் உயரிய பதவிகளை வகிக்கும் இதர உயர் அதிகாரிகளில் டத்தோ சசிகலா தேவி சுப்ரமணியம் ஒருவர் ஆவார்.கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி டத்தோ சசிகலா ​தேவி, சிலாங்கூர் மாநில இடைக்கால போ​லீஸ் தலைவராக பதவியேற்றார்.

அன்றைய சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமது- பதவி ஓய்வுப்பெற்றதைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில போ​லிஸ் படைக்கு தலைமையேற்ற டத்தோ சசிகலாதேவி, சிலாங்கூர் மாநில புதிய போ​லீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் பதவியேற்றப் பின்னர் டத்தோ சசிகலா தேவி மாநிலத்தின் துணை போ​லீஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்