டத்தோ கு. பத்மநாதன் தமிழ்ப்பள்ளியில் விருந்தளிப்பு விழா

டத்தோ கு.பத்மநாதன் தமிழ்ப்பள்ளியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சிறந்த அடைவு நிலைக்கான விருந்தளிப்பு விழா மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகியவை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக ரெப்பா சட்டமன்ற உறுப்பினரும் நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினருமான வீரப்பன் சுப்ரமணியம் கலந்து சிறப்பித்தார்.

வீரப்பன் உரையாற்றுகையில் சிறப்பாக இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்திற்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மாணவர்களின் வளர்ச்சிக்கும் அடுத்தக்கட்ட நகர்விற்கும் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஒரு மிகப்பெரிய தூணாக இருப்பத்தை கண்கூடாக பார்க்க முடிகிறது என்று அவர் உரையில் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் கல்வியின் முக்கியத்துவத்தையும் தாம் சிறுவயதிலிருந்து வளர்ந்த சூழ்நிலையைப் பற்றியும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

நடந்தர குடும்பத்திலிருந்து தாம் வந்திருந்தாலும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து ஒரு வழக்கறிஞ்ராகவும் அரசியல்வாதியாகவும் உயரமுடிந்த போது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் அதற்கான உழைப்பும் இருந்தால் அனைவரும் சாதிக்க முடியும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அங்கமாக மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளையும் எடுத்து வழங்கியதுடன் இப்பள்ளிக்கு தமது சார்ப்பாக 3000 வெள்ளி உதவிநிதியை தருவதாக உறுதியளித்தார்.

தமது உரையை நிறைவு செய்வதற்கு முன், வீரப்பன் அவர்கள் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்து விடைப்பெற்றார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்