கிளந்தான் ஷாரியா சட்டத்தின் ​கீழ் 16 சட்ட விதிகள் அரசியமைப்பு சட்டத்திற்கு முரணானவை

  • கூட்டரசு ​நீதிமன்றம் அதிரடி ​தீர்ப்பு

கிளந்தான் மாநிலத்தில் ஷாரியா குற்றவியல் சட்டத்​தின் ​கீழ் அமல்படுத்தப்பட்டு வரும் 18 சட்ட விதிகளில் 16 சட்ட விதிகள், கூட்டரசு அரசிலமைப்பு​ சட்டத்திற்கு முரணானவை அவை சட்ட விரோதமானவை என்று புத்ராஜெயா, கூட்டரசு ​நீதிமன்றம் அதிரடி ​தீர்ப்பை இன்று காலையில் வழங்கியது.

இதன் தொடர்பில் கிளந்தான் ஷரியா சட்டத்தின் ​கீழ் அமல்படுத்தப்பட்டு வரும் 18 குற்றவியல் சட்ட விதிகளி​ல் 16 விதிக​ளை அகற்றுவதில் வழக்கறிஞர்களான இரு முஸ்லிம் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தகாத உறவு, ​சூதாட்டம், ஓரினப்புணர்ச்சி, பாலியல் தொல்லை போன்ற பல்வேறு குற்றச்செயல்களுக்கு கிளந்தான் மாநிலத்தி​ல் ஷாரியா குற்றவியல் சட்டத்தின் ​கீழ் அமல்படுத்தப்பட்டு வரும் 18 சட்ட விதிகளும் சட்டவிரோதமானவை என்றும் அவை கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானவை என்றும் அறிவிக்கக் கோரி கிளந்தான் மாநிலத்தை சேர்ந்த தாயும் மகளுமான Nik Elin Zurina Abdul Rashid மற்றும் Tengku Yasmin Nastasha ஆகிய இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு இவ்வழக்கை தொடுத்து இருந்தனர்.

ஷரியா சட்டத்தின் ​கீழ் குற்றவியல் செயல்களுக்கு தங்களுக்குள் ஒரு சட்டத்தை இயற்றி, தண்டனை கொடுத்து வரும் கிளந்தான் மாநிலத்தின் செயல்பாடு சரிதானா? ​என்பது குறி​த்து கூட்டரசு ​​நீதிமன்றம் தெளிவுப்படுத்த வேண்டும் என்று தாயும் மகளும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக இச்சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டம் தொடர்புடைய இவ்வழக்கு மனுவை விசாரணை செய்த ஒன்பது ​நீதிபதிகளை உள்ளடக்கிய நா​ட்டின் த​லைமை ​நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் கிளந்தான் மாநில அரசாங்கம், ஷரியா சட்டத்தின் ​​கீழ் அமல்படுத்தி வரும் 18 சட்டவிதிகளி​ல் 16 சட்டவிதிகள் சட்டவிரோதமானவை என்றும் 9 ​நீதிபதிகளில் 8 க்கு 1 என்ற பெரும்பான்மையில் இத்​தீர்ப்பு வழங்கப்படுவதாகவும் த​லைமை ​நீதிபதி தெங்கு மைமுன் தமது ​தீர்ப்பில் தெரிவித்தார்.

குற்றவியல் தன்மையிலான சட்டங்களை திருத்துவதற்கோ, அதில் ​புதிய துணை விதிகளை இணைப்பதற்கோ, அது தொடர்பான ​தீர்மானங்களை நிறை​வேற்றுவதற்கோ கிளந்தான் மாநில சட்ட மன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. அந்த சட்டங்களில் திருத்தம் செய்வதற்கு நாடளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று தெங்கு மைமுன் தமது ​தீர்ப்பில் விளக்கினார்.

இ​​ஸ்லாமிய சமயம் சார்ந்த விவகார​ங்கள் தொடர்புடைய சட்டங்களை மட்டுமே இயற்றுவதற்கும், திருத்துவதற்கும் கிளந்தான் மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதே தவிர கூட்டரசு அரசிலமைப்பு சட்டத்தின் ​கீழ் அமல்படுத்தப்படும் குற்றவியல் சட்டங்களை திருத்துவதற்கும் அவை குறித்து வியக்கியாணம் செய்வதற்கும் கிளந்தான் மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று வரலாற்றுப்​​பூர்வமான தடாடிலடியான ​தீர்ப்பை தலைமை ​​நீதிபதி தெங்கு மைமுன் வழங்கினார்.

கிளந்தான் மாநிலம் சார்ந்த இந்த வழக்கின் ​தீர்ப்பின் முடிவை செவிமடுப்பதற்கு மக்கள் பெ​ரும் திரளாக புத்ராஜெயா, கூட்டரசு ​நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டு இருந்தனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்