டிரெய்லர் லாரி மோதியதில் துரித பேருந்து ஓட்டுநர் மரணம், அறுவர் உயிர் தப்பினர்

கெடா, மார்ச் 17 –

கெடா, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 75.2 ஆவது கிலோமீட்டார் தொலைத்தூரத்தில் டிரெய்லர் லாரி ஒன்று மோதியதில் துரித பேருந்து தீப்பிடித்து எரிந்து அப்பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில், ஆறு பேர் சேதாரமின்றி உயிர் தப்பினர்.

இன்று அதிகாலை 4.02 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து 18 அதிகாரிகள்,அமான்ஜெயா மற்றும் பென்டாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் உட்பட கூருன் தன்னார்வ தீயணைப்பு படை ஆகியோரின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக குவார் செம்பெடாக் தீயணைப்பு, மீட்புபடை நிலையத்தின் தலைவர் Fauzi Razali தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் அந்த பேருந்து ஓட்டுநரான 42 வயதுடைய இந்திய ஆடவரின் உடல் எரிந்த நிலையில் இருக்கையில் சிக்கியிருந்ததாக கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து 19 முதல் 57 வயதிற்கு உட்பட்ட பயணிகள் மற்றும் அந்த பேருந்தின் உதவி ஓட்டுநர் ஆபத்துமின்றி உயிர் தப்பியதாகபௌசி ராசாலி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

இன்று அதிகாலை 4.37 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதுடன் விபத்தில் காயமுற்ற அந்நபர்கள் பென்டாங் Pendang மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் இச்சம்பவத்தில் 32 வயது டிரெய்லர் ஓட்டுநரும் காயமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்