டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை , மே 10-

டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஆர்சிபியின் முன்னாள் வீரர் வணிந்து ஹசரங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவைத் தொடர்ந்து ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து, நேபாள், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், உகாண்டா, நமீபியா, ஓமன், கனடா, பப்புவா நியூ கினியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

இந்த தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இடம் பெற்றுள்ள அணிகள் ஒவ்வொன்றாக வீரர்களை அறிவித்து வருகிறது. ஏற்கனவே நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகள் தங்களது வீரர்களை அறிவித்தது.

இந்த நிலையில் இன்று இலங்கை 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதில், ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான வணிந்து ஹசரங்கா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், சிஎஸ்கே மற்றும் தோனியின் செல்லப்பிள்ளை நம்பிக்கை நட்சத்திரம் விக்கெட் டேக்கர் மதீஷா பதிரனாவும் இடம் பெற்றுள்ளார்.

வணிந்து ஹசரங்கா (கேப்டன்), சரித் அசலங்கா (துணை கேப்டன்), குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, கமிந்து மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் சனாகா, தனஞ்செயா டி சில்வா, மகீஷ் தீக்‌ஷனா, துணித் வெல்லாலகே, துஷ்மந்தா சமீரா, மதீஷா பதிரனா, நுவான் துஷாரா, தில்சன் மதுஷங்கா.

இந்த தொடரில் டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணி டி குரூப்பில் இடம் பெற்றிருக்கிறது. இந்த குரூப்பில் வங்கதேசம், நேபாள், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இலங்கை தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி 3 ஆம் தேதி நடைபெறுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்