தண்டனையை எதிர்த்து இசா சாமாட் மேல்முறையீடு நாளை தீர்ப்பு

நெகிரி செம்பிலான், மார்ச் 5 –

நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசாரும், முன்னாள் அமைச்சரும், பெல்டா வின் முன்னாள் தலைவருமான தான் ஶ்ரீ முகமாட் இசா அப்துல் சாமாட் டிற்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு சிறை மற்றும் ஒரு கோடியே 54 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி ஆபராதம் ஆகிய தண்டனையை எதிர்த்து அவர் செய்து கொண்ட மேல்முறையீட்டில் புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் நாளை புதன்கிழமை தீர்ப்பு அளிக்கவிருக்கிறது.

தாம் தலைமையேற்று இருந்த பெல்டா நிர்வாகம், சரவாக், கூச்சிங்கில் உள்ள மெர்டெக்கா பெலாஸ் ஹோட்டல் சுயிட்ஸ் ஹோட்டலை வாங்கியதில் 30 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக ஒன்பது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த 73 வயதுடையை முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சரான இசா அப்துல் சமாட்டிற்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் 6 ஆண்டு சிறைத்தண்னையும் அபராதத்தொகையும் விதித்தது.

இத்தண்டனையை எதிர்த்து அம்னோ முன்னாள் உதவித் தலைவரான இசா அப்துல் சமாட் செய்து கொண்ட மேல்முறையீடு மீதான வழக்கில் புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக இருந்தது.

எனினும் கடைசி நேரத்தில் தீர்ப்பு தேதி மாற்றப்பட்ட நிலையில் , நாளை புதன்கிழமை தீர்ப்பு அளிக்கப்படவிருக்கிறது.

அம்னோவின் முன்னாள் தலைவரான இசா அப்துல் சமாட், தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்படுவாரா? அல்லது அவருக்கு எதிரான தண்டனை உறுதி செய்யப்படுமா? என்பது பெரும் கவன ஈர்ப்பாக மாறியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்