தனிநபர்களின் விவரக்குறிப்புகள் மூன்றாம் தரப்பினரிடம் கசிவது முழு வீச்சில் தடுக்கப்படும்

கோலாலம்பூர், ஜன – 4,

தனிநபர்களின் விவரக்குறிப்புகள் மூன்றாம் தரப்பினரிடம் கசிவது, அரசாங்கம் தொடங்கியுள்ள தேசிய முதன்மை தரவுகள் தளமான PADU வின் மூலம் தடுக்கப்படுவதற்கு அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி உறுதி அளித்துள்ளார்.

தனிநபர்கள் மற்றும் குடும்ப வருமானம் தொடர்புடைய தகவல்களை சேகரிக்கும் தேசிய பதிவுத் திட்டமான PADU, விலிருந்து எந்த தகவலும் கசியாமல் இருப்பதை எல்லா நிலைகளிலும் உறுதி செய்வதற்கு பொதுச் சேவை பணியாளர்கள் அதனை 100 விழுக்காடு பலப்படுத்துவார்கள் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேவேளையில் PADU வின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சிலர் கவலை கொண்டு இருப்பதால் அதற்கு முழுமையாக தீர்வு காணப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

PADU, மலேசியர்களின் தகவல்களை உள்ளடக்கிய தேசிய தரவுகள் தளமாகும். அதன் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும் என்று ரபிஸி ரம்லி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்