முன்னாள் நிதி அமைச்சர் துன் டயிம் ஸைனுடினுக்கு எதிராக எஸ்பிஆர்எம் விசாரணை – மேலும் நால்வரிடம் வாக்குமூலப் பதிவு

கோலாலம்பூர், ஜன – 4,

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பரும், முன்னாள் நிதி அமைச்சருமான துன் டயிம் ஸைனுடினுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வரும் விசாரணையில் மேலும் நான்கு முக்கிய நபரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த நால்வரிடம் SPRM விசாரணை நடத்திய போது, அவர்களின் வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள், எஸ்பிஆர்எம் – மை கடுமையாக சாடியுள்ளனர்.

விசாரணையின் போது தாங்கள் அனுமதிக்கப்படாதது, சட்டத்திற்கு மீறிய செயலாகும் என்று வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
தாம் நிதி அமைச்சராக இருந்த போது லஞ்ச ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் புகார் தொடர்பில் டயிம் ஸைனுடின் தற்போது எஸ்பிஆர்எம் மினால் விசாரிக்கப்பட்டு வருகறார்.

டயிம் ஸைனுடினின் குடும்பத்திற்கு சொந்தமான கோலாலம்பூரில் உள்ள 60 மாடிகளை கொண்ட விஸ்மா இல்ஹாம் கோபுரத்தை எஸ்பிஆர்எம் கடந்த மாதம் பறிமுதல் செய்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்