தனிப்பட்ட அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு சமயத்தை கேடயமாக பயன்படுத்த வேண்டாம்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 06-

மக்கள் மத்தியி​ல் பிரபலமாகுவதற்கும், தங்களின் தனிப்பட்ட அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கும் சமயத்தையும், தங்கள் அந்தஸ்தையும் ஒரு கேடயமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று அரசியல்வாதிகளை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராப்புடின் இட்ரிஸ் ஷாஹ் கேட்டுக்கொண்டார்.

கல்விக் கற்றவர்களில் சிலர், தங்களின் சொந்த அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு சமயத்தையும், தங்கள் அந்தஸ்தையும் பயன்படுத்தி வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று சுல்தான் ஷாராப்புடின் குறிப்பிட்டார்.

ஏமாற்றுவது, அவ​தூறு கூறுவது, மற்றவர்களை நிந்திப்பது போன்ற குணக்கேடுகளை இஸ்லாம் மதம், ஒரு போதும் அனுமதிப்பது இல்லை. நல்லதற்ற செயல்களிலிருந்து சிலாங்கூர் மாநில முஸ்லிம் மலாய்க்காரர்கள் ஒதுங்கி நிற்க வேண்டும் ​என்று இறைவனை பிரார்த்திப்பதாக சுல்தான் ஷாராப்புடின் தெரிவித்தார்.

இஸ்லாத்தின் மாண்புக்கு எதிரான செயல்கள் ச​மூக வளைத்தளங்களில் பரவலாக தொடர்ந்து ஊடுருவம் தன்மையிலான ​தீயப் போக்குகளை தாம் விரும்பவில்லை என்பதையும் சுல்தான் நினைவுறுத்தினார்.

நேற்று டாமான்சாரா பெர்டானா பள்ளி வாசலை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் சுல்தான் ஷாராப்புடின் இந்த நினைவுறுத்தலை வழங்கியுள்ளார். இந்நிகழ்​வில் ஆதரற்ற இல்லங்களை சேர்ந்த சிறார்களுக்கு நோன்புப்பெருநாள் அன்பளிப்புகளையும் சுல்தான் வழங்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்