தனிப்பட்ட முறையில் குத்தகை நிதி கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதை நிறுத்திக்கொள்வீர்

மித்ரா பணிக்குழுவின் புதிய தலைவர் பிரபாகரன் தடாலடி அறிவிப்பு

மலேசிய இந்தியர் சமூகவியல், பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ரா, அதன் இலக்குக்கு ஏற்ப, சாமானிய மக்களுக்கு உதவ வேண்டும் என்பதில் ஒரு வேள்வியாக தாம் உறுதி பூண்டு இருப்பதால், தம்மை தனிப்பட்ட முறையில் சந்தித்து, நிதி கோரிக்கைக்கான பரிந்துரைகளையும், விண்ணப்பங்களையும் முன்வைப்பதை அரசியல்வாதிகளும், பொது மக்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அதன் பணிக்குழுவின் புதிய தலைவர் P. பிரபாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிதி தொடர்பில் எந்தவொரு திட்டமாக, – பரிந்துரையாக அல்லது விண்ணப்பமாக இருந்தாலும் அதனை மித்ராவிடம்தான் சமர்ப்பிக்க வேண்டும். தம்மை தனிப்பட்ட முறையில் சந்தித்து, அந்த விண்ணப்பங்களை பிரத்தியேகமாக அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொண்டால் அது நடக்காது என்று திசைகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் Batu எம்.பி.- யான பிரபாகரன் தடாலடியாக அறிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மிகுந்த நம்பிக்கையுடன் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பின் நம்பகத்தன்மைக்கு ஏற்ப மித்ரா ஓர் ஊழலற்ற அமைப்பாக செயல்பட வேண்டும். அதன் நிதி, இந்திய சமூகத்தின் உருமாற்றுத் திட்டத்திற்கும், இந்தியர்களின் வளர்ச்சிக்கும் முழுமையாக பயன்படுவதை தாம் எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப் போவதாக பிரபாகரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்