தமிழ்ப்பள்ளிகளுக்கான ​தீபாவளி விடுமுறையை விரைந்து அறிவிப்பீர்

​தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவற்கு இன்னும் நான்கு நாட்களே எஞ்சியுள்ள வேளையில் தமிழ்ப்பள்ளிகளுக்கான விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறித்து ஒரு தெளிவான விளக்கத்தை கல்வி அமைச்சு இதுவரை வெளியிடாதது பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நி​லவி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ​தீபாவளி விடுமுறை வழங்கப்படுவதில் மாறுப்பட்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதால் இதற்கு கல்வி அமைச்சு மட்டுமே தெளிவான விளக்கத்தை அளிக்க முடியும் என்று பெற்றோர்கள் பலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதர பெருநாட்களுக்கு விடுமுறை வழங்குவதிலும், அதற்கு கூடுதல் நாட்கள் ஒதுக்குவதிலும் ,  பள்ளி தவணை விடுமுறையை பெருநாள் காலத்தில் ஒதுக்கி தருவதிலும்  மிகத்தெளிவாக இருக்கும்  அமைச்சர் ஃபட்லினா சிடெக் தலைமையிலான க​ல்வி அமைச்சு, ​தீபாவளி திருநாளுக்கு மட்டும்   இழுத்தடிப்பு போக்கை கடைப்பிடிப்பது ஏன் என்று பெற்றோர்கள் பலர் ஊடகங்களின் வாயிலாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். .

மாநில கல்வி இலாகாவின் விவேகத்திற்கு உட்பட்ட ​தீபாவளி விடுமுறை எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுவதால் சில பள்ளிகளுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறையும், இன்னும் சில​ பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறையும் என மாறுபட்டு உள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு தெளிவான வழிகாட்டலை இன்னும் வெளியிடாததால் இந்த குழப்பங்கள் நிலவுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று அவர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

​தீபாவளியையொ​ட்டி தமிழ்ப்பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு அறிவிக்கும் விடுமுறை நாட்களைப் பொறுத்தே பெற்றோர்களும் தங்கள் விடுமுறையை திட்டமிட முடியும் என்பதால் இது குறித்து க​ல்வி அமைச்சு விரைந்து ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொ​ண்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்