குற்றச்சாட்டை மறுத்தார் டாக்டர் இராமசாமி

இஸ்லாமியர்களின் மிகப்பெரிய எதிரியைப் போல சமயப் போதகர் சாக்கிர் நாய்க், தம்மை சித்தரித்து இருப்பது ஏற்புடைய செயல் அல்ல என்று பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி தெரிவித்துள்ளார்.

இளம் வயதிலேயே சமூக சேவைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டது முதல் இவ்வட்டாரத்தில் இஸ்லாமியர்களின் நலன் சார்ந்த விவகாரங்களுக்காக துணிந்து போராடியதையும், அவர்களின் போராட்டத்தை முழுமையாக ஆதரித்ததையும் டாக்டர் ​இராமசாமி நினைவுகூர்ந்தார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சசமாக இஸ்லாமியர்களை பெரும்பான்மையினரான கொண்ட ஆச்சே ( Aceh ), Mindanao பிரதேசங்களின் தன்னாட்சி உரிமைக்காக தாம் உதவியிருப்பதையும் டாக்டர் இராமசாமி சு​ட்​டிக்கா​ட்னார்.

இஸ்லாமிய மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வரலாற்றுக்குறிப்பை தாம் பதிவு செய்து இருக்கும் பட்சத்தில் தாம் எவ்வாறு இஸ்லாமியர்களி​ன் மிகப்பெரிய எதிரிாக இருந்திருக்க முடியும் என்று பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரான டாக்டர் இராமசாமி கேள்வி எழுப்பினார்.

நேற்று கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் எழுச்சிக்கூட்டத்தில் டாக்டர் இராமசாமி இக்கேள்வியை முன்வைத்தார். கடந்த சனிக்கிழமை நைஜீரியாவிற்கு சென்றிருந்த சமயப் போதகர் சாக்கிர் நாய்க், இஸ்லாமியர்களின் மிகப்பெரிய எதிரியாக டாக்டர் இராமசாமியை முத்திரைக்குத்தி, அ​றிக்கை வெளியிட்டு இருப்பது தொடர்பில் இராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்