தலையில் விழுந்த 5 கிலோ எடைக் கொண்ட கல், ஓட்டுநர் உயிரிழந்தார்

ஈப்போ, ஏப்ரல் 09-

பேராக், ஈப்போ, குனோங் ராப்பாட் அருகேயுள்ள பொழுதுபோக்கு தளத்திற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிவந்த ஓட்டுநரின் தலையில் திடிரென 5 கிலோகிராம் எடைக் கொண்ட கல் விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று நிகழ்ந்திருந்த அச்சம்பவம் குறித்து காலை மணி 11.30 அளவில் தகவல் கிடைத்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் அபாங் சய்னால் ஆபிதீன் அபாங் அஹ்மத் கூறினார்.

பாதிக்கப்பட்ட 44 வயது உள்நாட்டு ஆடவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.

வியட்நாம்-ம்மைச் சேர்ந்த பயணிகளை ஈப்போ-விற்கு அழைத்து சென்றிருந்த அந்த ஓட்டுநர், சம்பந்தப்பட்ட பொழுதுப்போக்கு தளத்திற்கு அவர்களை அழைத்து சென்ற போது, அந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக அபாங் சய்னால் விவரித்தார் .

அவ்வாடவரின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக, ராஜா பேரமைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை, அந்த ஓட்டுநரின் தலையில் விழுந்த கல்லே அவரது மரணத்திற்கு காரணம் எனவும் அவரது உடம்பில் குற்றச்செயலுக்கான கூறுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அபாங் சய்னால் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்