வெயிலில் நீண்ட நேரம் இருந்தால் வெப்ப தாக்குதல் பக்கவாதம்ஏற்படும்!

கோத்தா பாரு, ஏப்ரல் 09-

பொதுமக்கள் குறிப்பாக எளிதில் நோய் பாதிப்புக்கு இலக்காகக்கூடியவர்கள் அதிக நேரம் வெப்பமான சூழ்நிலையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்கு வெப்ப தாக்குதல் பக்கவாதம் ஏற்படுமென கிளந்தான் சுகாதாரத் துறை நினைவுறுத்தியுள்ளது.

நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தின் போது, நிச்சயமாக வெளிப்புற நடவடிக்கைகள் அதிகம் இருக்கும். நோய் பீடித்துள்ள முதியவர்களும் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய சிறார்களும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்வது அவசியம்.

தங்களின் பிள்ளைகளுக்கு எதிர்பாராத சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பெற்றோர்கள் அவ்வப்போது, அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக வெயிலில் நடமாடும் போது, உடலில் வெப்பம் ஏற்பட்டு தலைவலி, வாந்தி, களைப்பு முதலானவை ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் சுகாதாரத் துறை கூறியது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்