தவறான சிகிச்சையால் உயிரிழந்த நோயாளி : விசாரணை செய்து வருகிறது சுகாதார அமைச்சு

கெடா சுங்கை பட்டாணி சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவாறான சிகிச்சையால் நோயாளி ஒருவர் உயிரிழந்தார் என சமூக ஊடகங்களில் கடந்த வியாழக் கிழமை பரவி வந்த செய்தியைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு தற்போது விசாரணை செய்து வருகிறது.

சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனை நிர்வாகம் தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் பெறப்படும் ஒவ்வொரு புகாரும் நேர்மையான முறையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு விசாரிக்கப்படும் என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரத்தை தமது தரப்பு மிகவும் கடுமையானதாகக் கருதுவதாக அந்த மருத்துவமனை தெரிவித்த நிலையில், குற்றஞ்சாட்டப்படுவது போல் நடந்த சம்பவம் உண்மையா அல்லது வதந்தியா எனவும் விசாரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஒரு வேளை நடந்த சம்பவம் உண்மையாக இருக்கின்ற நிலையில்,ஈரகசியக் காப்பு கொள்கைக்கு இணங்க விசாரணை முடிவை இறந்து போன நோயாளியின் குடும்பத்தாருக்கு மட்டும் தெரிவிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

,அருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொள்ளப்படும் நிலையில், அந்த விவகாரத்தை சுகாதார அமைச்சு சமரசம் செய்து கொள்ளாது என சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனை தெரிவித்தது.

இதற்கிடையில், இறந்து போன நோயாளியின் குடும்பத்தாருக்கு சுகாதார அமைச்சு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது சுகாதார அமைச்சு.

முன்னதாக, சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு நள்ளிரவு 12.45 மணி அளவில் நெஞ்சு வலி. மூச்சுத் திணறல் எனக் கூறி 51 வயது ஆடவர் ஒருவர் வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு கேஸ்திரிக் மருந்து கொடுக்கப்பட்டதாகவும், 5 மணி நேரம் கழித்து அவர் உயிரிழந்தார் எனவும் சமூக ஊடகங்களில் தகவல் பதவி வந்தது.

அந்த சமூக ஊடகப் பதிவின்படி, குறிப்பிட்ட மருத்துவமனையில் பணி புரிந்த துணை மருத்துவ அதிகாரி அவசர சிகிச்சைப் பிரிவில் அந்த 51 வயது நோயாளியைக் கவனித்ததாகவும் நோயாளிக்கு கேஸ்திரிக் நோய் கண்டிருப்பதாகவும் எண் வரிசைப்படி அழைக்கும் வரை காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அதிகாலை 4.30 மணி வரையில் அவர் அழைக்கப்படவும் இல்லை, மருத்துவரால் கவனிக்கப்படவில்லை.

அதிகாலை 6.00 மணி அளவில் அந்த நோயாளியின் நிலை மிகவும் மோசமடைந்த பிறகு, அவசர சிகிச்சைப் பிரிவின் சிவப்புப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டார். எனினும், காலை 6.31 மணி அளவிம் அவர் இறந்ததாக அந்த சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்