தாக்கப்பட்டது மட்டுமின்றி துப்பாக்கி மிரட்டலுக்கு ஆளாகிய ஆடவர்

செபாங் – கில் லாரி ஓட்டுநர் ஒருவரை 30 நபர்கள் தாக்கப்பட்டது மட்டுமின்றி அதில் சந்தேகிகும் ஒருவர் தமது துப்பாக்கியை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை கம்போங் பாரு டெங்கிலில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் செங்கல், தலைகவசம், துடைப்பம் ஆகிய பொருட்களை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் தம்மை தாக்கியதாக பாதிக்கப்பட்ட 44 வயதுடைய தியோ சிட் கியோங் கூறினார்.

பாதிக்கப்பட்ட அந்நபர் தனது மகளின் வாகனத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாதையை வழிமறித்து நிறுத்தப்பட்டிருக்கும் அண்டை வீட்டுக்காரரின் வாகனத்தை நகர்த்துமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அச்சம்பவத்தின் போது இரவு 10:15 மணியளவில் தனது 21 வயதுடைய மகள் அருகில் இருக்கும் கடைக்கு செல்லவிருந்த வேளையில் பாதையை இடையூறு செய்யும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த அண்டை வீட்டுக்காரரின் காரை நகர்த்த கூறியபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்நபர்கள் தம்மை தாக்கியதாக தியோ சிட் கியோங் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.

முன்பாக, இதுக்குறித்து 14 பேர் காவல்துறையினர் கைது செய்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்