68 ஆண்டுகளுக்கு பிறகு பண்டார் ஹிலிரில் ‘மெர்டேக்கா’ முழக்கம்

நாட்டின் முதலாவது பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் – ஹஜ் மலாயா கூட்டமைப்பு சுதந்திர தேதியை அறிவித்த வரலாற்று நிகழ்வினை நினைவுக்கூறும் வகையில் நேற்று இரவு மலாக்கா, பண்டார் ஹிலி- ரில் உள்ள திடலில் ”மெர்டேக்கா” என்ற புனித முழக்கம் ஒலிக்க செய்யப்பட்டது.

இது நாட்டின் பிடியில் இருந்து கிடைக்கபெற்ற விடுதலையை குறிப்பிடத்தக்கதாகும். சுமார் 68 ஆண்டுகளுக்கு பிறகு துங்கு அப்துல் ரஹ்மான் நாட்டின் சுதந்திரத்தை முதன்முதலில் அறிவித்ததை தொடர்ந்து மீண்டுக் அதனை நினைவுக்கூறும் வகையில் நேற்று நடைபெற்ற இந்த கொண்டாட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகின்றது.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மலாக்கா மாநிலத்தின் முதலமைச்சர் Datuk Seri Ab Rauf Yusoh ஆகியோர் M4442 என்ற பதிவு எண் கொண்ட பழங்கால வாகனத்தின் மூலம் Bangunan Merah Stadhuys -யிலிருந்து Dataran Memorial Kemerdekaan வரையில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு ஊர்வலம் செல்லப்பட்டது.

கடந்த 1956 ஆம் ஆண்டில் பிப்ரவரி 20 ஆம் தேதியன்று சுதந்திர நோக்கத்திற்காக லண்டனிலிருந்து திரும்பியபோது அந்த பழங்கால கார் Tunku Abdul Rahman, பிரதிநிதியாக பேராக் சுல்தானை ஏற்றிச் சென்றதை நினைவுக்கூறும் வகையில் பிரதமர் அன்வாரும் Datuk Seri Ab Rauf -வும் அதில் ஊர்வலம் சென்றனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்