“திசைமாறிய ஏவுகணை” போலந்தில் பகீர்!

வார்சா, மார்ச் 25.

ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடரும் நிலையில், இப்போது ரஷ்யா அனுப்பிய ஏவுகணை போலந்து நாட்டிலும் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே போர் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் தற்போது முடிவதாகத் தெரியவில்லை. இந்த போர் ஒரு பக்கம் தொடர ரஷ்யா மற்ற நாடுகளிடமும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்தச் சூழலில் ரஷ்யா ஏவுகணை ஒன்று திடீரென போலந்து நாட்டில் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது. போலந்து ராணுவம் இதற்கு எப்படிப் பதிலளித்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

மேற்கு உக்ரைனை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை ஒன்றை அனுப்பியது. இருப்பினும் அது எதிர்பாராத விதமாக போலந்து வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 40 நொடிகள் அந்த ஏவுகணை போலந்து வான்வெளியில் இருந்துள்ளது.

அதை போலந்து ராணுவம் உறுதி செய்துள்ளது. அந்த ஏவுகணை போலந்து வான்வெளி வழியாக ஓசர்டோவ் கிராமத்திற்கு மேலே பறந்து பறந்ததாக போலந்து தெரிவித்துள்ளது. அந்த ஏவுகணை முழுக்க முழுக்க ராணுவ ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டதாக போலந்து ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் பகுதியில் என்ன நிலைமை என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் போலந்து வான்வெளியின் பாதுகாப்பை உறுதி எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் போலந்து தெரிவித்துள்ளது. முதல்முறை இல்லை: ரஷ்யா அனுப்பும் ஏவுகணை தவறுதலாக போலந்து நாட்டிற்குள் நுழைவது இது முதல்முறை இல்லை.

ஏற்கனவே கடந்த 2023 டிசம்பர் 29ஆம் தேதி இதேபோலத் தான் உக்ரைனுக்குச் செல்லும் ரஷ்ய ஏவுகணை போலந்து வான்வெளியில் ஊடுருவியது. அப்போது அது பல நிமிடங்கள் அங்கேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2022 நவம்பரில் உக்ரைனில் இருந்து வந்த பாதுகாப்பு எல்லைக்கு அருகில் உள்ள போலந்து கிராமமான ப்ரெஸ்வோடோவ் மீது விழுந்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்