தீயில் 90 சதவீதம் வாகனங்கள் எரிந்தன

ஜின்ஜாங், தாமான் பெரிங்ஙின், ஜாலான் மிரி யில் உள்ள வாகனப் பட்டறையில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 கார்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் உட்பட ஒரு லோரி தீயில் எரிந்து சாம்பலாகின.

இன்று காலை 5:20 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததாக தெரியவந்துள்ளது.

ஜின்ஜாங், செந்தூல், மஞ்சலாரா ஆகிய தீயணைப்பு, மீட்புப்படை நிலையங்களிலிருந்து 25 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்ப்புபடை தலைவர் முஹமாட் ஹஸ்புல்லா நய்மி மஹ்மட் கூறினார்.

தீயணைப்பு துறையினர் அவ்விடத்திற்கு சென்றபோது 90 சதவீதம் வாகனங்கள் தீயில் பாதிக்கப்பட்டிருந்ததுடன் தீ மற்ற இடங்களில் பரவாமல் இருப்பதை கட்டுப்படுத்த தீயை அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக முஹமாட் ஹஸ்புல்லா ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்தார்.

தீ விபத்து நிகழ்ந்த காரணக்குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்