துப்பாக்கிச் சூட்டு நடத்திய ஆடவர், 7 நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்

கோத்தா பாரு

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை பின்னிரவு துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை, 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு கோத்தா பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆடவரிடம் போலீஸ் விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக இன்று தொடங்கி வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி வரையில் அவரை தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவை நீதிபதி துவான் ரைஸ் இம்ரான் ஹமீத் வழங்கினார்.

கடந்த சனிக்கிழமை பின்னிரவு 1.30 மணியளவில் சம்பந்தப்பட்ட ஆடவர், KLIA விமான நிலையத்தில் தனது மனைவியை நோக்கி இருமுறை சுட்டத்தில், அவரது பாதுகாவலரான உள்நாட்டு ஆடவர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.

அச்சம்பவத்திற்கு பிறகு, தலைமறைவாகிய அந்த ஆடவர் 38 வயது ஹபிசூள் ஹராவி என அடையாளம் காணப்பட்ட வேளை, நேற்று மாலை மணி 3 அளவில் Kota Bharu-விலுள்ள ஓர் இடத்தில் போலீஸ் அவரைக் கைது செய்தது குறிப்பிடதக்கதாகும்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்