இஸ்ரேல் மீதான DRONE தாக்குதல், ஈரானின் நடவடிக்கையை தற்காக்கின்றது

கோலாலம்பூர், ஏப்ரல் 16-

சிரியா நகர் டமாஸ்கஸ்-சிலுள்ள ஈரான் தூதரத்தின் மீது இஸ்ரேல் படையினர் தொடுத்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான், இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை கொண்டிருப்பது நியாயமான ஒன்று என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இஸ்ரேல் தொடுக்கின்ற தாக்குதலுக்கு பதிலடியை வழங்குவது தவிர, தங்கள் தரப்பு வேறு எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்காது என ஈரான் அரசாங்கம் வழங்கியுள்ள உத்தரவாதத்தில் மலேசியா மனநிறைவைக் கொள்வதாகவும் பிரதமர் கூறினார்.

மத்திய கிழக்கில் பதற்ற நிலையை மேலும் மோசமடைய செய்யும் வகையில் இஸ்ரேல் பதிலடி நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என இதர நாடுகளுடன் இணைந்து மலேசியா வலியுறுத்துகின்றது. அனைத்துலக மக்களும் அதையே விரும்புவதாக, பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

முன்னதாக, பிரதமர் அன்வார் நேற்று தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு கூட்டத்திற்கு தலைமையேற்று, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலை குறித்து விவாதித்தது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்