தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார் மண்வாரி இயந்திரத்தின் ஓட்டுநர்

கோத்தா பாரு, ஏப்ரல் 17-

16 ஆண்டுகளுக்கு முன்பு, மாது ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட மண்வாரி இயந்திரத்தின் ஓட்டுநர் ஒருவரை அதிலிருந்து விடுதலை செய்து 38 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படி விதிக்க கோத்தா பாரு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி கோலா திரங்கானு உயர்நீதிமன்றத்தில் 43 வயது சுல்ஹிஷாம் பேட்லி முகமட் என்ற அந்த மண்வாரி இயந்திரத்தின் ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி துன் தெங்க்கு மைமூன் துவான் மாட் ஒருமனதாக அத்தண்டனையிலிருந்து விடுவிக்க தீர்ப்பளித்தார்.

இதுக்குறித்து மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை சட்டம் 2023 -இன் பிரிவு 3(1) -யின் கீழ் குற்றச்சாட்டப்பட்டவரின் விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட பிறகு இந்த தீர்வு வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி காலை 10:30 மணியளவில் கெமாமான் நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான தோட்டத்தில், கம்போங் பக்காவு திங்கி கிளையின் அம்னோ மகளிர் தலைவியான 55 வயது ஜைத்தொன் முஹம்மது என்பவரை கொலை செய்து புதைத்ததாக அவ்வாடவர் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்