நஜீப்பை வீட்டுக்காவலில் வைக்கவே அந்த உத்தரவு

கோலாலம்பூர், ஏப்ரல் 17-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் சிறைத் தண்டனை காலம், 12 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது, வீட்டுக்காவலில் வைப்பதற்கே.கோலாலம்பூர், ஏப்ரல் 17-முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் சிறைத் தண்டனை காலம், 12 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது, வீட்டுக்காவலில் வைப்பதற்கே.

பொது மன்னிப்பு வாரியம் வழங்கிய கடிதத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது உண்மையே என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

நஜீப் தனது எஞ்சிய தண்டனைக் காலத்தை சிறையில் கழிக்கும்படி வலியுறுத்தப்படவில்லை. மாறாக, அந்த தண்டனை காலத்தை அவரை விட்டுக்காவலின் வாயிலாக கழிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட் இருந்தது என்று கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சார்வு செய்துள்ள AFIDAVIT மனுவில் ஜாஹிட் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நஜீப்பின் தண்டனை காலம் குறைக்கப்பட்டது தொடர்பாக பொது மன்னிப்பு வாரியத்தின் கடிதத்தின் உள்ளடக்கத்தை கண்டறியும் பொருட்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நஜீப் சார்வு செய்துள்ள சீராய்வு மனுவை ஆதரித்து, அம்னோவின் தலைவர் அகமட் ஜாஹிட் இவ்விவரத்தை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் மாமன்னர் சுல்தான் அப்துல்லா தலைமையிலான மன்னிப்பு வாரியத்தின் அந்த கடிதம் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி வெளியிடப்பட்டு இருந்தது. மறுநாள் ஜனவரி 30 ஆம் தேதி தமது இல்லத்திற்கு வந்த முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் தெங்கு சாப்ருல் அப்துல் அஜீஸ், அந்த கடிதத்தின் உள்ளடக்கத்தை தம்மிடம் காட்டியதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

நஜீப், தனது எஞ்சிய 6 ஆண்டு கால சிறைத்தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் கழிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாக நஜீப்பின் வழக்கு மனுவை ஆதரிக்கும் தனது AFIDAVIT மனுவில் அகமட் ஜாஹிட் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்