தேசிய முன்னணியும் நம்பிக்கைக் கூட்டணியும் சகோதரர்கள் – ஸாஹிட்

 

பேராவின் தேசிய முன்னணியும் நம்பிக்கைக் கூட்டணியும் தங்களுக்கிடையே மாநில அரசு நிர்வாகத்தில் நேர்மையும் ஒருமித்த தன்மையையும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

 

அவ்விரு கட்சிகளும் மாநில அளவில் மட்டுமின்றி, மத்திய அளவிலும் ஒற்றுமை அரசை அமைக்கும் திறன் கொண்டவை என்பதை இதற்கு முன் காட்டிய ஒத்துழைப்பில் உறுதிப்படுத்தப்பட்டது என சுட்டிக் காட்டினார்.

 

“தேசிய முன்னணியும் நம்பிக்கைக் கூட்டணியும் சகோதரர்கள். எனவே, நன்முறையில் கலந்தாலோசனை செய்ய வேண்டும். பேராவின் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் இங்கு ஒற்றுமை அரசாங்கத்தை நிலை நிறுத்துவார் என ஸாஹிட் தெரிவித்தார்.

 

வெளிப்படைத் தன்மையான, நேர்மையான தலைமைத்துவத்தோடு தொடர்ந்து ஆட்சி வழிநடத்தப்பட்டால், எதிர்வரும் 16வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியும் நம்பிக்கைக் கூட்டணியும் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்றார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்