தொகுதி எல்லையை மறு சீரமைக்கும் முன் அனைவரது கருத்தையும் கேட்கப்பட தேர்தல் ஆணையத்திற்குப் பெர்சோ பரிந்துரௌ

தேர்தலுக்கான தொகுதிகளின் எல்லையை மறு சீடமைப்பு உட்படுத்தப்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அனைவரது கருத்தையும் தேர்தல் ஆணையம் கேட்க வேண்டும் என பெர்சே பரிந்துரைத்துள்ளது.

சில தரப்பினருக்கு மட்டுமே பயனளிக்கும் வலையில் எல்லை மறு சீரமைப்பு அமையக் கூடும் என்பதால், முழுமையானக் கருத்துகளைப் பெறுவது முக்கியம் என்று பெர்சே குறிப்பிட்டது.

அதே சமயம், கடந்த 2020 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் சட்டங்கள் மற்றும் வழிமுறை குறித்த அறிக்கையை அரசாங்கம் பொதுவில் வெளியிட வேண்டும் எனவும் அந்த அறிக்கை விவாதிக்கப்பட வேண்டும் எனவும் பெர்சே வலியுறுத்தியது.

மேலும், UNDI18 எனப்படும் 18 வயதை எட்டியவர்கள் வாக்காளர்களாகப் பதிவாகும் முறை தற்போது நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தேர்தலில் வாக்களிப்பு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகரித்துள்ள வாக்காளர்கள் எண்ணிக்கையால் சில தொகுதிகளில் அவ்விவகாரத்தில் சமநிலையற்றச் சூழலும் ஏற்படக் கூடும் என்பதை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும் என பெர்சே கூறியது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்