‘நஜீப்பின் தடுப்புக்காவலை இடம் மாற்றும் மாற்றுவதற்கான விண்ணப்பம் முன்வைக்கப்பட்டதா?

அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்

கோலாலம்பூர், மார்ச் 7 –

தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், வீட்டு தடுப்புக்காவலுக்கு இடம் மாற்றுவதற்கான மேல்முறையீட்டின் பரிந்துரை முன்வைக்கப்பட்டதா? என்பது குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று நாடளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

தனக்கு எதிரான 12 ஆண்டு சிறைத் தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ நஜீப், பொது மன்னிப்புக்கு விண்ணப்பித்த போது, தனக்கு எதிரான சிறைத் தண்டனையை வீட்டுத் தடுப்புக்காவலாக மாற்றப்பட வேண்டும் என்ற ஒரு பரிந்துரையையும் முன்வைத்ததாக அறியப்படுகிறது.

நஜீப், உண்மையிலேயே அப்படியொரு இணைப்பு விண்ணப்பத்தை சமர்ப்பித்து இருப்பாரேயானால்,அது குறித்து மன்னிப்பு வாரியக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா? அப்படி விவாதிக்கப்பட்டது என்றால் அது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து தாம் அறிய தாம் விரும்புவதாக இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்