தான் ஶ்ரீ முகாமாட் இசா அப்துல் சாமாட் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு

நெகிரி செம்பிலான் , மார்ச் 7 –

நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசாரும், முன்னாள் அமைச்சரும், பெல்டா வின் முன்னாள் தலைவருமான தான் ஶ்ரீ முகமாட் இசா அப்துல் சாமாட் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிலிருந்து புத்ரா புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்ததைத் தொடர்ந்து அவரின் விடுதலையை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த மேல்முறையீடு மீதான விண்ணப்பம் இன்று காலையில் புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்ற பதிவதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

முகமாட் இசா அப்துல் சாமாட் விடுதலையை எதிர்த்து, கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருப்பதை சட்டத்துறை தலைவர் அகமாட் டெரிருடின் சாலே இன்று உறுதிபடுத்தினார்.
முகமாட் இசா அப்துல் சாமாட் மேல்முறையீட்டு வழக்கில் பிராசிகியுஷன் தரப்பு, அப்பீல் நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமாக தீர்ப்பின் நகலுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

74 வயதான அம்னோ முன்னாள் உதவித் தலைவரான இசா அப்துல் சாமாட் 30 லட்சம் வெள்ளி லஞ்சம் வாங்கியது தொடர்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விதித்த 6 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ஒரு கோடியே 54 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி ஆபராதத்தை அப்பீல் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்