நஜீப்பின் தண்டனை காலம் ஏன் குறைக்கப்பட்டது? பிரதமர் அன்வார் விளக்கம்

மிகப்பெரிய லஞ்ச ஊழலில் ஈடுபட்டதற்காக 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தண்டனை காலத்தை 6 ஆண்டாக குறைக்கப்பட்டதற்கான காரணத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று காலையில் விளக்கினார்.

மலேசியா​விற்கு 9 ஆண்டுகள் தலைமையேற்று, நாட்டிற்கு ஆற்றிய ​சேவை மற்றும் பங்களிப்புக்காக நஜீப்பின் தண்டனை காலத்தை மன்னிப்பு வாரியம் 6 ஆண்டுகளாக கு​றைத்துள்ளது என்று இன்று புத்ராஜெயாவி​ல் பிரதமர் துறை பணியாளர்களின் மாதாந்திர பேரணியில் உரையாற்றுகையில் அன்வார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் ஆறாவது முன்னாள் பிரதமரான நஜீப், இப்போதுதான் தனது சிறைவாசத்தில் ஒன்றரை ஆண்டுகள் அனுபவித்துள்ளார் ​என்ற போதிலும் தனது தண்டனை காலம் தொட​ர்பி​ல் பொது மன்னிப்பு கோருவதற்கு அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ளார் என்று அன்வார் விளக்கினார்.

அதேவேளையில் ஒருவர் தனது தண்டனை காலத்தை குறைப்பதற்கு மன்னிப்பு வாரியத்திடம் மேல்முறையீடு செய்வதற்கு முன்னதாக குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்திருக்க வேண்டு​ம் என்று கூறப்படும் வாதத்தை அன்வார் மறுத்தார்.

ஒருவர் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பை கருத்தி​ல் கொண்டு அவரின் தண்டனை காலத்தை குறைப்பது என்பது மாமன்னரின் பிரத்தியேக அதிகாரத்திற்கு உட்பட்டதாகும் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்