நடைபாதையில் விற்பனை செய்த ஆடவரின் வணிகப் பொருட்கள் பறிமுதல்

கோலாலம்பூர், ஏப்ரல் 24-

கோலாலம்பூர், ஜாலான் சலோமாவில் உள்ள நடைபாதையில் வியாபாரம் செய்த வெளிநாட்டவரின் தலைகனமான செயலை கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (DBKL) அதிகாரிகள் முறியடித்ததுடன் வணிகத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முறையான உரிமம் ஏதுமில்லாத காரணத்தினால் அந்நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இச்சோதனையில், கிரில் அடுப்புகள், பிளாஸ்டிக் அலமாரிகள், சோளங்கள், பலகை உட்பட மேலும் பல பொருட்கள் அப்பிரஜையிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் யாவையும் செராஸ், தாமான் மிஹார்ஜாவில் உள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு சொந்தமான ஒரு கடைக்கு கொண்டு செல்லப்பட்டன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்