நாட்டில் கல்வி முறையில் சீரமைப்பைக் கொண்டுவர, கல்வியமைச்சு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது

புத்ராஜெயா, ஏப்ரல் 30-

நாட்டின் கல்வித்துறையை சீரமைக்கும் நோக்கில், பாலர் பள்ளிக்கான கட்டமைப்பு உட்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

2027ஆம் ஆண்டு பள்ளித்தவணைக்கான பாடத்திட்டம், பள்ளிப்படிப்பை மாணவர்கள் பாதியிலேயே நிறுத்திக்கொள்ளும் போக்கை களைய, பாடத்திட்ட தலையீடுகள் உள்ளிட்ட கல்வி சீர்திருத்த முயற்சிகளை விளக்கியது.

குறிப்பாக, நாடு தழுவிய நிலையிலுள்ள கல்வி கழகங்களில் பாலர்ப்பள்ளிக்கான வகுப்புகள் விரிவுபடுத்தப்படும். அதன் வழி, பள்ளிப்படிப்பை பாதியிலேயே மாணவர்கள் நிறுத்திக்கொள்ளும் பிரச்னைக்கு ஆரம்பக்கட்டத்திலேயே தீர்வை வழங்க முடியும்.

அது தவிர, ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் வேளை, பல்வேறு நிகழ்ச்சிகள் அதற்காக ஏற்படுத்தி தரப்படும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் கல்வியமைச்சு கூறியுள்ளது.

மலேசியாவில், ஐந்தாம் ஆண்டு மாணவர்களில் 58 விழுக்காட்டினர் மட்டுமே வாசிக்கும் திறனை கொண்டிருப்பதாக கூறி, நாட்டின் கல்வித்தரம் குறித்து உலக வங்கி கவலையை வெளிப்படுத்தியிருந்த நிலையில், கல்வியமைச்சு அவ்வாறு பதிலுரைத்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்