நிந்தனை கூற்றை வெளியிட்டது தொடர்பான வழக்கில், சனுசி முஹமட் நோர் பிரதிநிதித்துவ மனு நிராகரிக்கப்பட்டது.

ஷாஹ் அலாம், மே 17-

நிந்தனைக் கூற்றை வெளியிட்டது தொடர்பான இரு குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வலியுறுத்தி, கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி முஹமட் நோர் செய்திருந்த பிரதிநிதித்துவ மனுவை சட்டத்துறை அலுவலகம் இம்மாதம் 3ஆம் தேதி நிராகரித்துள்ளது.

இன்று ஷாஹ் அலாம்-மில் நடைபெற்ற வழக்கின் மறுசெவிமடுப்பின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் மஸ்ரி முகமது தாவூத், சட்டத்துறையின் அம்முடிவு குறித்து சனுசி முஹமட் நோர்-ரின் வழக்கறிஞர் தரப்பிடம் தெரிவித்தார்.

கடந்தாண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி, சிலாங்கூர், கோம்பாக், தாமான் செலாயாங் முத்தியாரா-கம்போங் பெண்டாஹாரா எனுமிடத்தில், சிலாங்கூர் சுல்தான் மற்றும் பேரரசருக்கு எதிராக சனுசி முஹமட் நோர் நிந்தனைக் கூற்றை வெளியிட்டதாக, அவர் மீது அதே மாதம் 18ஆம் தேதி, செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஆயினும், அக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து விசாரணைக் கோரினார்.

இந்நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சனுசி முஹமட் நோர் -ருக்கு ஐந்தாயிரம் வரையிலான தண்டம் அல்லது அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை அல்லது அவையிரண்டுமே விதிக்கப்படலாம்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்