நிறுவன இயக்குநரை எஸ்பிஆர்எம் கைது செய்தது

பினாங்கு மாநிலத்தில் அரசாங்க இலாகா குத்தகையை பெறுவதற்காக பொறியிலாளர் ஒருவருக்கு கைமாறாக 13 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக கொடுத்ததாக நம்பப்படும் நிறுவனம் ஒன்றின் இயக்குநரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

50 வயது மதிக்கத்தக்க அந்த இயக்குநர் விசாரணைக்கு உதவுவதற்காக இன்று அதிகாலை 3 மணியளவில் எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட இயக்குநரிடம் 13 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக நம்பப்படும் பொறியியலாளர் ஒருவரை எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட இருவரும் இன்று காலையில் ஜார்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு ஏதுவாக ஐந்து நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கான அனுமதியை எஸ்பிஆர்எம் பெற்றது.
இருவர் கைது செய்யப்பட்டதை பினாங்கு மாநில எஸ்பிஆர்எம் இயக்குநர் முஹமாட் பூவாட் பீ பஸ்ரா உறுதி செய்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்