நீர் அணைக்கட்டு தேக்கத்தின் நீரின் கொள்ளளவு இன்னும் மூன்று மாதங்களே தாங்க வல்லதாகும்

எல் நினோ தாக்கத்தினால் பெர்லிஸ் பாதிப்படைந்திருப்பதால் Beseri, Timah Tasoh நீர் அணைக்கட்டு தேக்கத்தின் நீரின் கொள்ளளவு இன்னும் மூன்று மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீர் அணைக்கட்டு தேக்கத்தின் நிலை இன்னும் சீராக இருப்பதுடன் அணைப்பகுதியில் தண்ணீர் விநியோகம் அல்லது செயற்கை மழை மேற்கொள்வதைக் குறித்து எந்தவொரு நடவடிக்கைகளும் இதுவரையில் திட்டமிடவில்லை என்று பெர்லிஸ் மாநில உள்கட்டமைப்பு மற்றும் பொது போக்குவரத்து குழுவின் தலைவர் Izizam Ibrahim தெரிவித்தார்.

நிலவரப்படி, இன்றுவரை அணையின் நீரின் கொள்ளளவு 28.57 மீட்டர் அல்லது 25.5 மில்லியன் கன லிட்டராக இருப்பதுடன் Timah Tasoh அணையில் மீதமுள்ள மொத்த நீர்த்தேக்கம் 84 சதவீதமாக உள்ளது என்று Izizam Ibrahim கூறினார்.

அணையில் ஒவ்வொரு நாளும் சராசரி 0.02 மீட்டர் தண்ணீர் அளவு குறைவதாக காட்டுகின்றது.

தற்போதைய வானிலையை பொறுத்து இந்த அணையின் நீரின் கொள்ளளவு இன்னும் மூன்று மாதங்கள் நீடிக்கும் என்று நம்பப்படுவதாக நேற்று மாநில சட்டமன்ற வளாகத்தில் சந்தித்தபோது Izizam Ibrahim அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்