நீர் விநியோகம் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது

திரங்கானு, மார்ச் 8 –

எல் நினோ தாக்கத்தினால் தற்போது நாடு வெப்பம் மற்றும் வறண்ட காலநிலையால் பாதிப்படைந்திருந்தாலும் திரெங்கானுவில் நீர் விநியோகம் இதுவரையில் பாதிப்படையாமல் சீராக இருப்பதாக கூறப்படுகின்றது.

மாநிலத்தில் உள்ள ஆறுகள் உட்பட நீர் அணைக்கட்டு தேக்கத்தின் நிலை இன்னும் சீராக இருப்பதால் மக்களுக்கு நீர் சென்றடைவதில் எந்தவொரு சிக்கலும் இதுவரையில் எதிர்நோக்கவில்லை என்று திரெங்கானு மந்திரி பெசார் டத்துக் ஶ்ரீ டாக்டர் அகமாட் சம்சூரி மொக்தார் தெரிவித்தார்.

எல் நினோ தாக்கத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்திப்பதை தவிர்க்க மாநில அரசாங்கம், ஷரிக்காட் அயிர் திரங்கானு சென்டிரியான் பெர்ஹாட் சாத்து நிறுவனத்தின் மூலம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அகமாட் சம்சூரி அறிவித்தார்.

இதுவரையில் நீர் விநியோக தடை எதுவும் ஏற்படாமல் சமாளிக்க முடிவதுடன் இந்த வறட்சி மேலும் தொடர்ந்தால் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள தயாராக வேண்டும் காரணம் ரமடான் மாதத்திலும் ஹரி ராயாவிற்கு ஒரு வாரம் இருக்கும் பொழுது நீரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அகமாட் சம்சூரி விவரித்தார்

வெப்ப காலம் அதிகரிக்க நீரின் பயனும் அதிகரிப்பதால் அதிகமானோர் நீரை பயன்படுத்த தொடங்குவர். இருந்தபோதிலும் சிக்கனமான அளவிலேயே நீரை பயன்படுத்தினால் மட்டுமே இந்த சிக்கலை தவிர்க்க முடியும் என்று நேற்று நடைபெற்ற திரெங்கானு தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கான 30 ஆவது ஆண்டு விழாவில் அகமாட் சம்சூரி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்