நீர் விநியோக தடை நாளை இரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஜோர்ச்டவுன், ஜன 29 –

பினாங்கில் இன்று முதல் தொடங்கவிருந்த நீர் விநியோக தடை நாளை செவ்வாய்க்கிழமை இரவு வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பினாங்கு நீர் விநியோக வாரியம் நேற்று தெரிவித்துள்ளது.

நீரை சேகரித்து வைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படுவதாக குடியிருப்புவாசிகள் அளித்த கோரிக்கைகளுக்கு அடுத்து நாளை இரவு 11:30 மணி வரையில் நீர் விநியோக தடை தள்ளிவைக்கபட்டுள்ளதாக PBAPP அறிவித்துள்ளது.

அடுத்தக்கட்ட திட்டமாக இரண்டு புதிய 600 மில்லிமீட்டர் குழாய்களின் இணைப்பு, 1350 மில்லிமீட்டர் நீருக்கடியில் குழாய்களை துண்டிக்கப்படுவதை அமல்படுத்துவதற்கு முன் பாதிக்கப்பட்ட 120,000 பயனருக்கும் போதுமான நீரை சேமித்து வைத்துக் கொள்வதற்கு குறைந்தபட்சம் 24 மணி நேரம் வழங்க திட்டமிட்டுள்ளதாக PBAPP கூறியுள்ளது.

சுங்கை பெராயில் நீர் விநியோக தடையினால் பாதிக்கபட்ட 109,000 பயனருகளுக்கு நேற்று மாலைக்குள் நீர் விநோகம் சீரமைக்கப்பட்டதாக PBAPP தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 11,000 பயனருக்கு இன்று அதிகாலையில் நீர் விநியோகம் செய்யப்பட்டதாக PBAPP விளக்கியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்