நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டில் உள்ளது

சீனப்புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்கள் இலவச டோல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இன்று காலை 9:30 மணிவரையில் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

தலைநகரிலிருந்து காராக் வரையிலான கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 1 (LPT1) வழியாக செல்லும் இரு பாதைகளிலும் போக்குவரத்து சீராக இருப்பதாக மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஏற்பட்டிருந்து வாகனங்கள் மெதுவாக பயணித்தாலும் போக்குவரத்து இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தாப்பா – விலிருந்து கோப்பெங் -கிற்கு செல்லும் வடக்கு நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக நகர்வதுடன் Bertam -மிலிருந்து சுங்ஙாய் பெத்தானிக்கு செல்லும் வழியில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றன.

நெடுஞ்சாலைகளில் வாகனத்தில் பயணிக்கும் போது கவனமாக இருக்குமாறும், நெடுஞ்சாலை அதிகாரிகள் வழக்கும் அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படியுமாறும் மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கேட்டுக் கொண்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்