நோட்டீஸுக்காக காத்திருக்க வேண்டாம், தொகுதியை காலி செய்யவும்

கோலா திரங்கானு, ஏப்ரல் 12-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவை வழங்கியதற்காக, பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கட்சியில் அவர்களது உறுப்பினர் தகுதியை இயல்பாகவே இழந்துவிட்டனர். அந்த எழுவரும் தங்களது தொகுதிகளை காலி செய்ய வேண்டுமென பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவு தலைவர் டத்தோ ரசாலி இட்ரிஸ் வலியுறுத்தினார்.

கட்சியின் நிலைப்பாட்டை மீறி எதிர்தரப்பினருக்கு ஆதரவை வழங்கும் பெர்சாத்துவின் மக்கள் பிரதிநிதிகள் தங்களது உறுப்பினர் தகுதியை இழக்கச் செய்யும் கட்சியின் சட்டத்திருத்தத்தை தேசிய சங்கப் பதிவகத் துறை அங்கீகரித்துள்ளது. பெர்சாத்துவிடமிருந்து அதிகாரப்பூர்வ நோட்டிஸுக்காக அவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்றாரவர்.

பிரதமருக்கு ஆதரவளித்ததற்காக, பெர்சாத்துவிலிருந்து தாங்கள் எந்தவொரு நோட்டீஸும் கிடைக்காததால், தமது தொகுதியை காலி செய்வது தொடர்பில், ஏதும் கருத்துரைக்க போவதில்லை என புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோசுயேட் அபு ஹஸ்ஸின் ஹாபிஸ் சுயேட் அப்துல் பாசால் இதற்கு முன்பு தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த ரசாலி இட்ரிஸ், கூடிய விரைவில் பெர்சாத்து அதன் சட்டத்திருத்தத்துடன் நோட்டீஸை அந்த எழுவருக்கும் அனுப்பி வைக்கும் என்றார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்