சிலாங்கூரில் அனைத்து கிராமத் தலைவர் பொறுப்புகளையும் திரும்ப ஒப்படைக்கின்றது உம்னோ

சிலாங்கூர், ஏப்ரல் 12-

சிலாங்கூரில் தங்களுக்கு மாநில அரசாங்கம் வழங்கிய 75 கிராமத் தலைவர்கள் அல்லது கிராம சமூக நிர்வகிப்பு மன்றத் தலைவர் பொறுப்புகளை திரும்ப ஒப்படைப்பதாக, சிலாங்கூர் உம்னோ தலைவர் டத்தோ வீரா மெகாட் சூல்கர்னாயின் ஒமார் டின் அறிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக, உம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் சாஹித் ஹமிடியின் புறநகர் மற்றும் கூட்டரசு மேம்பாட்டு அமைச்சின் கீழ் மாநிலம் முழுவதும் ஏற்படுத்தப்படவிருக்கும் மதானி புறநகர் சமூக தலைவர் பொறுப்புகளில் அவர்கள் அனைவரும் நியமிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டிய நபர்களின் பெயர்களை சிலாங்கூரிலுள்ள உம்னோவின் அனைத்து தொகுதிகளிடமும் வழங்கியுள்ளன. நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு, அந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என மெகாட் சூல்கர்னாயின் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரியில் சிலாங்கூர் உம்னோவுக்கு ஊராட்சி மன்றங்களில் வழங்கப்பட்ட 20 இடங்களை அக்கட்சி ஏற்றுக்கொள்ளாததால், 12 ஊராட்சி மன்றங்களில் 2024-2025 ஆம் ஆண்டு தவணைக்கான 272 புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்