நோன்புபெருநாளை முன்னிட்டு சாலைகள் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 04-

நோன்பு பெருநாளை முன்னிட்டு இம்மாதம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி வருகின்ற 21ஆம் தேதி வரையில் பிரதான சாலைகளில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்படுகின்றன.

வாகனமோட்டிகள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றுவதை கண்காணிக்க சுமார் 382 உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக, சிலாங்கூர் சாலை போக்குவரத்துத்துறை இயக்குநர் அஸ்ரின் பொர்ஹான் தெரிவித்தார்.

வாகனமோட்டிகளின் பயணத்தை சீர்ப்படுத்தவும் பொது போக்குவரத்து சேவையை சுமூகமாக இயங்குவதை உறுதிபடுத்தவும் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது தவிர, சாலை விபத்துகள் அதிகம் நிகழக்கூடிய முதன்மை சாலைகளில் ரோந்து பணிகளும் கண்காணிப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை மீறுவது, சமிக்ஞைகளை பின்பற்றாதது, வாகனமோட்டும் போது கைப்பேசிகளை பயன்படுத்துவது உள்ளிட்ட குற்றங்களை புரியும் வாகனமோட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அஸ்ரின் பொர்ஹான் எச்சரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்