வேப் கருவியைக் கொண்டு செல்பவருக்கு வெ.7,000 அபராதம்

சிங்கப்பூர், ஏப்ரல் 04-

சிங்கப்பூரில் வேப் எனப்படும் மின் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த கருவியை வாங்கினால் அல்லது பயன்படுத்தினால், ஒவ்வொரு குற்றத்திற்கும் மலேசிய மதிப்பில் 7 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.

சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் மலேசியர்கள் அதனை கருத்தில் கொள்ள வேண்டுமென அந்நாட்டு மலேசிய உயர் ஆணையர் டத்தோ டாக்டர் அஸ்பார் மொஹமட் முஸ்தாபார் நினைவுறுத்தினார்.

வேப் கருவியை விற்பது, விற்பதற்காக வைத்திருப்பது, இறக்குமதி செய்வது, அக்கருவியின் பாகங்களை விற்பது முதலானவை அங்குள்ள சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளாகும்.

முதல்முறையாக அக்குற்றத்தை புரிவோருக்கு அதிகபட்சமாக 35 ஆயிரம் வெள்ளி வரையில் அபராதம் அல்லது 6 மாத சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

சிங்கப்பூருக்கு வேலை செய்யவும் சுற்றிப்பார்க்கவும் வரும் மலேசியர்கள் அந்நாட்டின் சட்டத்திட்டத்தை அறிந்துக்கொண்டு வருவது அவசியம். இல்லையென்றால், அவர்களது கடப்பிதழை அமலாக்கத் தரப்பினர் பறிமுதல் செய்யும் பட்சத்தில், அவர்கள் மீண்டும் நாடு திரும்புவது கடினம் என டத்தோ டாக்டர் அஸ்பார் மொஹமட் முஸ்தாபார் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்