பணமாற்று வியாபாரி மீது கொலை குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே 15-

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கோலாலம்பூர், பங்சார், ஜாலான் தெலாவி- யில் நிகழ்ந்த ஒரு சண்டையில் ஆடவரை வெட்டிக் கொலை செய்ததாக பணமற்று வியாபாரி ஒருவர், கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

சையத் கமால் சையத் முகமது என்ற 28 வயதுடைய அந்த பணமாற்று வியாபாரி, மாஜிஸ்திரேட் இல்லி மரிஸ்கா கலிசன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட பண மாற்று வியாபாரி,கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் பங்சார், ஜலான் தெலாவி 3, அஃபின் பேங்க் பின்புறம் உள்ள ஒரு சந்தடிப்பாதையில் 28 வயது எம். சஞ்சீத் குமார் என்பவரை கூர்மையான ஆயுதங்கள் மற்றும் போத்தல்களை பயன்படுத்தி கொலை செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

சஞ்ஜீத் குமார் படுகொலைக்கு பிறகு தலைமறைவாகி விட்ட பணமாற்று விாயாபாரி சையத் கமால் சையத் முகமது கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்தார்.

சஞ்ஜீத் குமார் படுகொலையில் சம்பந்தப்பட்டள்ளதாக கூறப்படும் மேலும் மூன்று இந்திய இளைஞர்களான 28 வயது ஜி. நரேஷ், 28 வயது K.V. பிரவீன் மற்றும் 30 வயது எஸ். லெட்சுமணன் ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் வோங் சாய் சியா முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

இன்று குற்றஞ்சாட்டப்பட்ட சையத் கமால் – க்கு எதிரான கொலை வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் தூக்குத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் பணமாற்று வியாபாரி சையத் கமால் குற்றஞ்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்