குற்றச்சாட்டுகளை வாசித்து முடிக்க ஒரு மணி நேரமானது

சிரம்பான், மே 15-

சிரம்பான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுங்கத்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள 43 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை, ஒவ்வொன்றாக வாசித்து முடிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரமானது.

41 வயதுடைய முகமது சையத் என்ற அந்த சுங்கத்துறை அதிகாரி, கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையில் 70 ஆயிரம் வெள்ளி சம்பந்தப்பட்ட 43 லஞ்ச ஊழல் குற்றங்களை புரிந்து இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மத் தர்மிஸி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த சுங்கத்துறை அதிகாரி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் சுங்கத்துறை அதிகாரியாக பணிபுரிந்த போது லஞ்சம் பெற்று வந்ததாக அவருக்கு எதிரான 43 குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட சரக்கு லோரிகளை சோதனையிடாமல், அந்த லோரிகள் KLIA கார்கோ பிரிவிலிருந்து வெளியேறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி துணை புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரியை கைது செய்வதற்காக அவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 65 நாட்களாக தேடி வந்ததாகவும், குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ள அவருக்கு ஜாமீன் அனுமதிக்கப்படக்கூடாது என்றும் நீதிமன்றத்தை SPRM கேட்டுக்கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்